Monday, 19 December 2016

நமது அன்பு மகள் - யாழினி

வளையாபதியும், குண்டலகேசியும், சிலப்பதிகாரமும் அணிந்த எங்களின் சீவக சிந்தாமணி இவள்.

இவள் எங்களின் வாழ்வு.எங்களின் வளம்.எங்களின் மானம்.எங்களின் செல்வம்.எங்களின் செல்லம்.எல்லாம் இவளே....

யார் எது பேசினாலும் எங்கள் தமிழ் பொய்யுரைக்காதென்ற சீரிய நோக்குடன் வாழும் அவளின் பிள்ளைகள் நாங்கள்.

ஆம்.தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும் - என்ற எங்கள் பாட்டன் வள்ளுவனது வாக்கே எங்களின் வேத வாக்கு. நாங்கள் வெற்றி காண்போம்.உழைப்பின் பயனாய் நாங்கள் காணும் அவ்வெற்றி எம் தமிழுக்கே அர்ப்பணம்.